பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
அம்மாப்பேட்டை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பெருந்துறை, தருமபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 6 ஆயிரத்து 398 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ரூ.2½ கோடி
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.11 ஆயிரத்து 928-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.12 ஆயிரத்து 912-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.2 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தருமபுரி, திருப்பூர் கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர்.