மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சிவகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-11-07 18:45 GMT

சிவகிரி:

சிவகிரியில் வத்தலகுண்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக் குடம் அழைப்பு, மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் கோபுர விமான கலசத்துக்கு சிறப்பு அபிஷேகமும், கருமாரியம்மன் மற்றும் பைரவர், சகல பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்