மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-15 18:54 GMT

புஞ்செய் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 13-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி விட்டு கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு தயாராக இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்