மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
திருக்கடையூர் கல்மேட்டு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது
திருக்கடையூர்
திருக்கடையூர் ஊராட்சியில் சந்து தெருவில் கல்மேட்டு மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று 2-வது கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமூர்த விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.