ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர வருடாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஓசூர்
ஓசூர் ராம்நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதையொட்டி வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.