மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
பின்னையடி மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேடு மேற்கில் அமைந்துள்ள பின்னையடி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீறு, உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.