மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா;

Update: 2023-05-04 10:24 GMT

மங்கலம்,

பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிநடுவேலம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 25-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.பின்னர் தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு சக்திகும்பம், சக்திகரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று நடுவேலம்பாளையம், பல்லவராயன்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இரவு சக்தி கும்பம், சக்திகரகம் கங்கை நதிக்கரை அடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீர் உற்சவத்துடன் பொங்கல் திருவிழா நிறைவடைகிறது.



Tags:    

மேலும் செய்திகள்