பிறந்தது மார்கழி: அதிகாலையில் பஜனை- சிவ, வைணவ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை

மார்கழி மாதம் பிறந்ததையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;

Update:2022-12-16 08:30 IST


மார்கழி மாதம் பிறந்து விட்டால் கதிரவன் கண் விழிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர் இல்லத்தரசிகள்.

குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி, தெருக்களில் அதிகாலை நேரத்தில் செல்வதும் வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் இன்று நடக்கின்றன.

இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நெல்லையில் உள்ள பெருமாள் கோயிலில் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்