சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை !

சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2023-03-24 12:35 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியினை செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களாக செலுத்தாத இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்