மின்சிக்கன வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி

மின்சிக்கன வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-12-14 18:44 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய மாரத்தான் ரோவர் ஆர்ச், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரி அம்பிகா கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழாவில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்