28 ஊராட்சிகளிலும் மாரத்தான் போட்டி

மண்டபம் யூனியனில் 28 ஊராட்சிகளிலும் மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-02-04 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் மண்டபம் யூனியனில் உள்ள 28 ஊராட்சிகளிலும் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் சித்ரா மருது கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலை வகித்து போட்டியில் பங்கேற்றார். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் பாரதிநகர், ஓம்சக்திநகர், அம்மா பூங்கா வழியாக மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊர் நல அலுவலர் முனியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ், தடகள பயிற்சியாளர் ஹனீபா, ஊராட்சி துணை தலைவர் வினோத், வக்கீல்கள் கருணாகரன், மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் செய்திருந்தார்.

இதேபோல ஊராட்சி தலைவர்கள் அழகன்குளம் வள்ளி, ஆற்றாங்கரை முகமது அலி ஜின்னா, ரெட்டையூரணி கணேசன், இருமேனி சிவக்குமார், என்மனங்கொண்டான் கார்மேகம், காரான் சக்திவேல், கீழநாகாச்சி ராணி, கும்பரம் துளசிதேவி, கோரவள்ளி கோகிலவாணி, சாத்தக்கோன்வலசை நாகேசுவரி, செம்படையார்குளம் கண்ணம்மாள், தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, தேர்போகி மோகன்குமார், பனைக்குளம் பவுசியாபானு, பிரப்பன்வலசை கலா உடையார், புதுமடம் காமில்உசேன், புதுவலசை மீரான்ஒலி, பெருங்குளம் கோ.சிவக்குமார், மரைக்காயர்பட்டினம் பைரோஸ் ஆசியம்மாள், மானாங்குடி பரமேசுவரி, வாலாந்தரவை முத்தமிழ்செல்வி, வெள்ளரிஓடை சந்திரசேகர், வேதாளை செய்யது அல்லாபிச்சை, நொச்சியூரணி சீனி அரசு, பாம்பன் அகிலா பேட்ரிக், தங்கச்சிமடம் குயின்மேரி, ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஹமிதியா ராணி ஜாகீர் உசேன், அத்தியூத்து அப்துல் மாலிக், சித்தார்கோட்டை முஸ்தரி ஜஹான் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளில் மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி செயலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்