மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி
இளைஞர் திருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வேலூர் மாவட்ட இளைஞர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி வேலூரில் நடைபெற்றது. போட்டியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி கிரீன் சர்க்கிள், மீன் மார்க்கெட் வழியாக நேதாஜி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
மாரத்தானில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனரும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலருமான பானுமதி, துணை இயக்குனர் (காசநோய்) ஜெயஸ்ரீ, டாக்டர் ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.