பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஊட்டியில் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 11:09 GMT

ஊட்டி

ஊட்டியில் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் விலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காக்காதோப்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கம் மூலம் தினசரி 1,150 லிட்டர் பால் ஆவின் நிர்வாகத்திற்கும், 130 லிட்டர் பால் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆவின் நிர்வாகத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரி காந்தல் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 20 லிட்டருக்கும் அதிகமான பாலை தரையில் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட முடிவு

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சரவணன் கூறியதாவது:-

ஆவின் நிர்வாகம் சார்பில் ஒரு லிட்டர் பால் ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.40-க்கு விற்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இதே விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையே புண்ணாக்கு ஒரு மூட்டை ரூ.2,900 ஆக விலை அதிகரித்துள்ளது. மேலும் வனப்பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மேய்ச்சல் நிலம் குறைந்து விட்டதால் தீவன பற்றாக்குறை நிலவி உள்ளது. எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 71 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைத்து ஊட்டி-குன்னூர் சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்