அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக மல்லி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மல்லி வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது இயங்காத ஒரு கோழிப்பண்ணையில் சரவெடி தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த சரவெடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மல்லி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யனார் (வயது30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.