அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
ஏழாயிரம்பண்ணை அருேக அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சூரார்பட்டி பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராகிம் வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட சரவெடிகளை அனுமதியின்றி தயார் செய்து கொண்டிருந்த ஜெயராம் (வயது 30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 12 அட்டை பெட்டிகளில் தயார் செய்யப்பட்ட 60 ஆயிரம் மதிப்புள்ள சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.