மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-27 18:45 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் 2023-2024-ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பாடப்பிரிவுகளான வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் சுற்றுச்சூழல் அறிவியல், ராஜாக்கமங்கலம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடத்தப்படும் கடல்சார் அறிவியல் மற்றும் இளங்கலை கடல்சார் படிப்புகளான (B.Sc. Artificial Intelligence, Machine Learning, B.Sc. Cyber Security, B.Sc. Data Science) பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு ஒரு சில காலியிடங்கள் உள்ளது. இந்த காலியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும்.

முதல்கட்ட கலந்தாய்வில் தவிர்க்கமுடியாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்கள் இரண்டாம்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் தாங்கள் முன்பே விண்ணப்பித்த விண்ணப்பப்படிவ நகலை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு முன்பாக office-uds@msuniv.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று காலியாக உள்ள பாடப்பிரிவை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது 0462-2333741, 2563063 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்