மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
கடையம்:
கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டுகள், நோயாளிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கான வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அரசு டாக்டர் பரணிகுமார், ஓ.பன்னீர்செல்வம் அணி புறநகர் மாவட்ட செயலாளர் என்.சிவலிங்கமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், கடையம் ஒன்றிய செயலாளர் ராஜவேல், தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.