மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2022-08-22 17:04 GMT

ஆலங்குளம்:

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசினார். இந்தநிலையில் தமிழக அரசு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் அமைப்பதற்கும், ரூ.2 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் ஒதுக்கியது.

இந்த நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையை எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் ஆய்வு செய்தார். இதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து காவலாகுறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டிடம் அமைப்பதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்