பூலாங்குளம் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு
பூலாங்குளம் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.;
பாவூர்சத்திரம்:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் பூலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள உச்சினி மாகாளியம்மன், முப்பிடாதி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நடந்து முடிந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது கோரிக்கை வைத்து தமிழக அரசிடமிருந்து நிதி பெற்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று பூலாங்குளம் கோவிலுக்கு நேரில் சென்று திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கோயில் திருப்பணிகளுக்கு நிதி பெற்று கொடுத்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மத்துரை, பேரூராட்சி செயலாளர் ஜே.டி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.