மகளிர் கலைக்கல்லூரி கட்டிடப்பணிகளை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

ஆலங்குளம் மகளிர் கலைக்கல்லூரி கட்டிடப்பணிகளை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-12-09 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் கழுநீர்குளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.11.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் காய்கறி சந்தையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். மேலும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள தொட்டியான்குளத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, பொதுக்குழு உறுப்பினர் ராதா, ஆலங்குளம் நகர செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கீழப்பாவூர் நகர செயலாளர் முருகன், அண்ணா தொழிற்சங்கம் சேர்மத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்