கரடி கடித்ததில் காயம் அடைந்தவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்

கடையம் அருகே கரடி கடித்ததில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

Update: 2022-11-12 18:45 GMT

ஆலங்குளம்:

கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்துக் குதறியதில், வைகுண்டமணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை ஐகிவுண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர் தளவை சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்