புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் உடல் எடை பிரிவில் 50 கிலோ முதல் 75 கிலோ வரைக்கும், அதற்கும் மேலும், மாஸ்டர்கள் பிரிவிலும் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்கள் பிரிவில் தங்களது கட்டுமஸ்தான உடலை ஆணழகன்கள் காண்பித்த காட்சியை படத்தில் காணலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.