மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

ராணிப்பேட்டையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-08 18:41 GMT

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரசார வாகனம் 3 நாட்களுக்கு நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பஸ் நிலையங்கள், வாரச்சந்தைகள், ெரயில் நிலையங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சென்று எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்புச் செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பைகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர்கள், தனியார் தொழில் நிறுவனத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்