கோவில்பட்டியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில்மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் தொடரும் கலவரத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க நிர்வாகி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணை தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வைத்தார். இதில் இந்திய தொழிற்சங்கம் மையம் மாவட்ட நிர்வாகி மோகன் தாஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார், மாற்றுத் திறனாளி சங்கம் முன்னாள் மாநில செயலாளர் முத்துக்காந்தாரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.