மாணிக்கவாசகர் குருபூஜை விழா

கும்பகோணத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது

Update: 2022-07-03 21:00 GMT

கும்பகோணம் நாணயக்கார தெருவில் உள்ள அறுபத்துமூவர் மண்டபத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், திருவாசகம் முற்றோதுதல், சமயச் சொற்பொழிவு, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவில், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். இதில், திருவாசகம் முற்றோதுதல் குழு தலைவர் சண்முகம், நிர்வாகி பாலு மற்றும் நிர்வாகிகளும், சிவனடியார்களும் கலந்து கொண்டனர். இதேபோல, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. சூரியனார் கோவில் குரு மகா சன்னிதானம் மகாலிங்க பண்டார சன்னதி மற்றும் ஆதீனப்புலவர் சிவாக்கிரக தேசிக சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








Tags:    

மேலும் செய்திகள்