மாணிக்க விநாயகர் கோவில் குடமுழுக்கு
மெலட்டூர் மாணிக்க விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அடிச்சேரி தெருவில் உள்ள மாணிக்க விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மாணிக்க விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.