செல்லியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு
செல்லியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு நடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஊரணி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நாட்டார்மங்கலம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். முன்னதாக கரகம் தூக்கும் வழிபாடு, குடி அழைப்பு நிகழ்ச்சி, அய்யனார் கோவில் பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.