சாலையோரம் கொட்டப்படும் மாம்பழ கழிவுகள்
கோபால்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே மாம்பழ கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபால்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட மாங்காய் கமிஷன் கடைகள் உள்ளன. இவற்றின் கழிவுகளை கோபால்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகில் சாலையோரம் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளில் இருந்து கழிவுகளை ஊழியர்கள் கொட்டி செல்கின்றனர். குப்பைகளுடன் சேர்ந்து மாம்பழ கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் குப்பை கழிவுகளால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி முன்பு உள்ள குப்பைகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பைகள் ெகாட்டுவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.