மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.34 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-09-28 10:10 GMT

புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்பட்ட காணிக்கைகளை உண்டியலில் இருந்து நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.34லட்சத்து 43 ஆயிரத்து 894 செலுத்தி இருந்தனர். 152.500 கிராம் தங்கம் மற்றும் 521 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் திறப்பின் போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்