தீவிர புயலாக நிலைகொண்ட 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்தது...!

சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.

Update: 2022-12-09 07:01 GMT

சென்னை,

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. தீவிர புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் இன்று அதிகாலை தீவிரமடைந்தது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இந்நிலையில், தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. புயலாக வலுவிழந்த மாண்டஸ் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுக்குறைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்