செல்வ விநாயகருக்கு மண்டலாபிஷேகம்
செல்வ விநாயகருக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கே.உத்தம்பட்டியில் உள்ள மும்மூர்த்தி செல்வ விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மும்மூர்த்தி செல்வ விநாயகருக்கு நைவேத்திய பிரசாதம் படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு 11 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.