மண்டலாபிஷேக பூர்த்தி விழா
லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
நீடாமங்கலம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் (கிருஷ்ணன் கோவில்) கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் தினமும் நடந்தது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று மண்டலாபிஷேக பூஜை பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி செங்கமலத்தாயார் லட்சுமி நாராயணப்பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.