மண்டல பூஜை

நாகமலைபுதுக்கோட்டை ஆனந்த அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 50-ம் ஆண்டு பொன்விழா மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது.

Update: 2022-12-25 20:18 GMT

நாகமலைபுதுக்கோட்டை, 

நாகமலைபுதுக்கோட்டை ஆனந்த அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 50-ம் ஆண்டு பொன்விழா மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. மண்டல பூஜையையொட்டி மங்கள வாத்தியம், லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், அன்னதானமும் நடந்தன. மாலை சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்