பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்
பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது.;
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரனமைப்பு பணிகளை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 48 நாட்கள் நிறைவையொட்டி மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. இதில் பஞ்சநதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.