திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவில் மண்டலாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலறந்து கொண்டனர்.

Update: 2023-03-16 17:25 GMT

திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவில் மண்டலாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலறந்து கொண்டனர்.

திருவண்ணாமலை -போளூர் சாலையில் தீபமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கியது. இதையொட்டி காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

மண்டல பூஜைகள் நிறைவையொட்டி நேற்று பச்சையம்மன் மன்னார்சாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவில் உள்பிரகாரத்தில் சுற்றி கொண்டு வரப்பட்டு அம்மனுக்கும், மன்னார்சாமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் நா.பழனி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்