அய்யப்பன் கோவிலில் மண்டலாபிஷேகம்
அய்யப்பன் கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடியில் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி கறம்பக்குடி சித்திவிநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அய்யப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் அய்யப்பா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.