மண்டலாபிஷேகம்
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சோனை அழகாயி கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சோனை அழகாயி கோவிலில் கடந்த 3-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்கார ஆராதனைகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு யாகவேள்விகள் நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.