கீழ்வேளூர் அருகே காக்கழனி ஊராட்சியில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. இதையடுத்து தினமும் மண்டல பூஜையை உபயதாரர்கள் செய்து வந்தனர். நேற்று மண்டல பூஜை பூர்த்தி நிறைவு விழா நடைபெற்றது. கோவிலில் காலை கணபதி ஹோமம், மழை மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றன. மாலை மழை மாரியம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி பொறுப்பாளர்கள் தலைவர் வெள்ளைச்சாமி, செயலாளர் விமல்தாஸ், பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.