கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ஆதனமுடைய அய்யனார் ராவுத்தர் சாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
திருமக்கோட்டை அருகே உள்ள களிச்சான்கோட்டை ஆதனமுடைய அய்யனார் ராவுத்தர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்களாக தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை விழா கணபதி ஹோமத்துடன் அபிஷேக, ஆராதனைகளுடன் நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.