வாங்கலம்மன் கோவிலில் மண்டகப்படி பூஜை

வாங்கலம்மன் கோவிலில் மண்டகப்படி பூஜை நடைபெற்றது.

Update: 2023-03-14 18:37 GMT

கொங்கு வேளாளர் கவுண்டர்களின், வரகுண்ணா பெருங்குடி குலம், குடிபாட்டு மக்களின் குலதெய்வமான கரூர் மாவட்டம், வாங்கல் வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. அதனையொட்டி கட்டளைதார்கள், வரகுண்ணா பெருங்குடி குல இளைஞர்கள் சார்பில் 47-வது மண்டகப்படி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு புனிதநீரால் நீராடப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு முன்பு யாக குண்டும் அமைக்கப்பட்டு, சிவாச்சாரிகள் மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) மண்டல பூஜைகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) நவசண்டி ஹோமமும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குத்து விளக்கு பூஜைகளுடன் நிறைவடைகிறது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொள்ளும்படி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்