மானாமதுரை நகராட்சி கமிஷனர் நியமனம்
மானாமதுரை நகராட்சி கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மானாமதுரை
மானாமதுரை நகராட்சியில் நகராட்சி கமிஷனர் இல்லாமல் இருப்பதும் அவ்வப்போது கூடுதல் பொறுப்பாக ஆணையாளர் பணியாற்றி வந்ததால் அலுவலகப் பணியிலும் தொடர்ந்து தொய்வு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் தற்போது மானாமதுரை நகராட்சிக்கு புதிய கமிஷனராக ரெங்கநாயகி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சியில் மேலாளராக பணியாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று மானாமதுரை நகராட்சியில் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.