மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2023-09-24 18:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

திருப்பீடம் அர்ச்சிப்பு

மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயம் மற்றும் புதிய திருப்பீடம் அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப்பீடத்தை திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்து வைத்தார்.

குழந்தை தெரசாள் ஆலயத்தின் அருட்தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் மற்றும் ஏராளமான அருட் பணியாளர்கள், பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ஆலயத்தின் 84-ம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

திருப்பலி

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பங்கு இறை மக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புனித குழந்தை தெரசாள் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 1-ந் தேதி நற்கருணை பவனியுடன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை புனித குழந்தை தெரசாள் ஆலய அருட்தந்தை எஸ். எஸ். பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்