மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம்

மணலூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2023-08-30 19:14 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மேகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதிக்கு தேவைப்படும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு பேசினர். அதற்கு பதில் அளித்து பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் கூறுகையில், கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை எழுத்தர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்