கால்நடை மருத்துவ கல்லூரியில் மேலாண்மை பயிற்சி

கால்நடை மருத்துவ கல்லூரியில் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-09-05 19:00 GMT

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வக விலங்குகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி 3 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரன், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் பேசினார்கள். இதில் 25 மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி இறுதி நாள் அன்று பயிற்சி பெற்றவர்களுக்கு முதல்வர் செல்லப்பாண்டியன் சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், பிரியா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்