மேலாண்மை பயிற்சி முகாம்

உணவு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-24 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான உணவு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமை தாங்கினார். முகாமில் கலந்துகொண்ட சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் உணவு உரிமம் பதிவு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. முகாமில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணகுமார், ராஜேஷ்குமார், தியாகராஜன், வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் அங்கீகாரம் பெற்ற நிறுவன பயிற்சியாளர்கள் மூலம் முகாமில் பயிற்சியளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்