நகராட்சி கவுன்சிலர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி
திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டு கவுசிலர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக நடந்தது. பயிற்சிக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த மாவட்ட உதவித் திட்ட அலுவலர்கள் முன்னிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.முனிசுப்புராயன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஆர்.பிராபகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் அரசு பள்ளிகளில் தேவையான கழிப்பிடம், குடிநீர், பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.
நகராட்சி அலுவக மேற்பார்வையாளர் (பொறுப்பு) மகாலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள், நகராட்சி துணைத் தலைவர் சபியுல்லா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா செய்திருந்தார்.