ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

வேட்டவலம் அருகே உள்ள ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-04 14:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செண்பகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளி வளாக தூய்மை குறித்து விவாதிக்கப்பட்டு, மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் அன்பரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்