விருதுநகர் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பு ஆண்டிற்கான முதல் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து கலெக்டர் விரிவாக கலந்தாலோசித்து தேவையான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார். கூட்டத்தில் பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.