கோவை அருகே குடும்பத்துடன் விறகு சேகரிக்க சென்ற நபர் யானை தாக்கி பலி

கோவை அருகே குடும்பத்துடன் விறகு சேகரிக்க சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார்

Update: 2023-06-21 09:21 GMT

கோவை,

கோவை மாவட்டம் ஆலந்துறையை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கல்பணா. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் ஐ.ஒ.பி காலனியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அவர் விறகு சேகரிப்பதற்காக மருதமலை அருகே உள்ள வனப்பகுதிக்கு மனைவியுடன் குழந்தையை கொண்டு சென்றிருந்தார்.

விறகு சேகரித்து விட்டு திரும்பி வரும் போது அங்கு சுற்றிகொண்டிருந்த ஒற்றை யானை ஒன்று இவர்களை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது குழந்தை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளது. இதனால் மருதமலையை ஒட்டியுள்ள கிராம் மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்