போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
திருமங்கலம்,
திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 40). இவர் திருமங்கலம், சிவரக்கோட்டையில் அடகு கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று மதுரை வில்லாபுரத்தினை சேர்ந்த ராஜேந்திரன (68) என்பவர் 2 மோதிரங்களை அடகு வைக்க வந்தார். நகையை சோதனை செய்து பார்த்த போது அது தங்கமூலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் போலிநகையை அடமானம் வைக்க முயன்ற முதியவர் ராஜேந்திரனை கைது செய்தனர்.